01

மனிதனின் மன நிலைகள் :-

மனிதனின் மன நிலைகள் :-

இதை 5 வகைகளாக பிரிக்கலாம்.

1) விழிப்புணர்வு நிலை ,(consciousness)

2) விழிப்பு உணர்வற்ற நிலை,( sub consciousness)

3) விருப்ப நிலை (free will)

4) கூட்டு விழிப்புணர்வு,(collective consciousness)

5) அதி சக்தி விழிப்புணர்வு(super consciousness)

இப்போது மனசுக்கு வருவோம்; நாம் நம் விருப்பத்தை (free will)அடைவதற்கு எந்த ஒரு விதியோ அல்லது காலமோ அல்லது வெளியோ (time and space) குறிக்கிடுவது

இல்லை.

காரணம் நம் சுய விருப்பம் நம் மனதில் பதியும் போது நம்முடைய உடலானது ஆற்றல் பெற்று செயலைச் செய்ய தூண்டுகிறது. இந்த தூண்டுதல் மனதில் நிகழ்கிறது.

ஆக மனம் தன் விருப்பத்தை அடைய "விழிப்பு நிலையை" பயன் படுத்திக் கொள்கிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

அதாவது நம் "விருப்பம்" நம்மை சார்ந்து இருந்தால் அது எந்த ஒரு பின் விளைவையும் ஏற்படுத்தப் போவது இல்லை. இது சுய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உதாரணம் : " புத்தகம் வாசித்தல்" - இது ஒருவரின் கற்பனைத் திறனை அதிகரித்து அவனுள் புதுப்புது சிந்தனைகளை வளர்த்து மேம்பட வைக்கிறது.

மேலும் இந்த ஒரு செயல் பாடு மூலம் அவனும் பயன் பெற்று தன்னை வளர்த்த சமுதாயத்திற்கும் ஒரு பங்களிப்பை வழங்குகிறான்.

இது சாத்தியமா???!!!!

இவை எல்லாம் எப்போது சாத்தியம் என்றால் " அவன் தன் விழிப்பு நிலையை -conscious state - நிகழ் காலத்தில் (present time) சமன் படுத்தி பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணம்: உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் தங்களை மக்களோடு மக்களாக இணைத்துக் கொண்டு காவியம் , கலை, இலக்கியம் படைத்தார்கள்.

மாறாக நம்முடைய 'மனசு' எப்போதும் நம் இறந்த கால நினைவுகளில் சிக்கிக் கொண்டும் ; வரும் காலத்தைப் பற்றி கவலையில் ஆழ்ந்தும் கிடப்பதால் இந்த விருப்பம் (FREE WILL) சுயம் பெற்று அறமாக (VIRTUE )ஆக மாறுவது கிடையாது.

இதற்கு மாறான " விழிப்பு உணர்வு அற்ற" நிலை பற்றி சற்று பார்ப்போம்........

நம் உணர்வுகள் மற்றும் நினைவுகள் (மனம் தன் வேலைக்கு ஒய்வு கொடுக்கும் நிலை) அடங்கி நம் ஐம்புலன்களும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படத் தொடங்குகிறது. அதாவது ஆழ்ந்த உறக்க நிலை....

அதே சமயத்தில் நம் உடம்பு தன் நிலையை சீர்படுத்தி கொண்டு, அடுத்து வரும் நிலையான ' விழிப்பு நிலைக்கு' (biological clock) ஏற்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த ஓய்வு "அவசியம் " -எல்லா ஜீவராசிகளுக்கும் தேவை ! இங்கே தான் ஒரு தொய்வு ஏற்படுகிறது.

இயற்கை நம்மை அப்படி ஆழ்ந்த உறக்கத்தில் வைப்பது இல்லை; மாறாக நம் உடலின் இயற்கை உபாதைகளை சரி செய்து கொள்ள அவ்வப்போது நம்மை தூண்டி அழைத்துச் செல்கிறது.

உதாரணம்: சிறுநீர் கழித்தல்; தண்ணீர் அருந்துதல்.

இங்கே ஒரு கருத்தை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

நம் விருப்ப நிலையை சரி செய்து கொள்ள இந்த "விழிப்புணர்வு அற்ற நிலை" என்பது இயற்கை நமக்கு கொடுத்த கொடை......

Here the FREE WILL is acting independent off the SUB CONSCIOUS STATE.

உதாரணத்திற்கு நம் அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு பதில் தெரியாமல் முழி பிதுங்கி , பதட்டம் ஏற்பட்டு நிலை குழைந்து இருப்போம்.

அதற்கு 'விடையாக' இந்த 'விழிப்புணர்வு ' நிலை பயன்படும்.

இதற்கு காரணம் , நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு " உணர்வற்ற நிலைக்கு" ஏற்ப தன் காலத்தை மற்றும் வெளியை ( time and space)சரியாக பயன் படுத்த தெரியும்.

இதன் மூலம் நாம் தெளிவு பெற்று நம்மை சரி செய்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவை எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது என்றால் நாம் நம் "விழிப்பு உணர்பு அற்ற" நிலையில் இருக்கும் போது "காலம் "தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இங்கே எதிர்பார்ப்புகள் , ஏமாற்றங்கள் இல்லை. "வெளியும் " -வெறுமை பெறுகிறது. ஆக இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஒரே நேர் கோட்டில் பயணப் படுவதால் நாம் நம் வெளியை மறுக்கிறோம். காலம் 'கை' கூடுகிறது . நல்ல சிந்தனை பிறக்கிறது. காலம் கனிகிறது. அதன் இடைவெளி குறைகிறது.

அடுத்ததாக கூட்டு விழிப்புணர்வு நிலை பற்றி ஆராய்வோம் -Collective consciousness .

இதன் மூலம் நம்முடைய நம்பிக்கைகள் , பிறரின் நம்பிக்கையோடு ஒத்து வரும் போது அங்கே மனித இனம் ஒரு சமூகமாக பயணிக்கிறது. இந்த பயணத்தில் ஏற்படும் மாற்றம் நாம் நம் வாழ்நாளில் தினம் தினம் கண்டு கொண்டு இருக்கிறோம்.

உதாரணமாக : - அரசியல் மாற்றம் ; இயற்கை பாதுகாப்பு ஆகியவை.

இறுதியாக அதி சத்தி வாய்ந்த விழிப்புணர்வு .....super consciousness

இதில் நம் சிந்தனைகளும் , செயல் பாடுகளும் காலத்தால் கரைந்து வெட்ட வெளியில் பிரபஞ்சத்தில் கலந்து நம் மனித குல வாழ்விற்கும் உறு துணையாக என்றும் இருக்கிறது.

உதாரணம் . :- இசை , ஓவியம்.

ஆக்கம் , படைப்பு : இராம. செல்வராஜ்.

Subscribe to my you tube சேனல்

https://www.youtube.com/shorts/J9RTMplLKz0?feature=share

Write a comment ...

Write a comment ...